சரமாரியாக சுரங்க டெண்டர்களில் கையெழுத்திட்ட அகிலேஷ் யாதவ்: சிபிஐ குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:34 am
former-up-cm-akhilesh-yadav-granted-13-mining-leases-in-one-day-cbi

முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, ஒரே நாளில் 13 சுரங்க டெண்டர்களில் கையெழுத்திட்டதாக சிபிஐ குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

2013ம் ஆண்டு ஹமிர்பூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் புதிய ஈ.டெண்டர் வழிமுறைகளை கொண்டுவர உத்தரவிட்டது. அப்போது சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஹமிர்பூர் பகுதியில் 14 சுரங்க டெண்டர்களுக்கு ஒப்புதல் அளித்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

2013ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி, ஒரே நாளில் அகிலேஷ் யாதவ் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 13 டெண்டர்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், ஜூன் 13ம் தேதி ஹமிர்பூரில் மேலும் ஒருவருக்கு இதேபோல டெண்டர் அளிக்கப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், அகிலேஷை தொடர்ந்து வந்த சுரங்கத்துறை அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, மேலும் 8 டெண்டர்களுக்கு இதேபோல ஒப்புதல் அளித்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், சிபிஐ-யை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை பாரதிய ஜனதா மிரட்டி வருவதாக இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close