ரஃபேல் ஒப்பந்தத்திலும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலா? ராகுல் காந்தியிடம் சரமாரி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:33 am
minister-ravi-shankar-prasad-questions-rahul-on-rafale-lobbying

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பிய ராகுல் காந்தியிடம், இடைத்தரகர்கள் மூலம் ஒப்பந்தத்தை மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரும், இடைத்தரகர்களின் தலையீட்டை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அதை மறுபரிசீலனை செய்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பொது வெளியில் உள்ள பல ஆவணங்களை பார்க்கும்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் அமலாக்கத்துறை பிடியில் உள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், ரஃபேல் ஒப்பந்தத்திலும் தலையிட்டதாகவும், காங்கிரஸ் கட்சி ரஃபேல் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்ய முயற்சித்ததாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பின்மெக்கானிக்கா என்ற நிறுவனம், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் பங்குகளை கொண்டுள்ளது. மத்திய அரசின் ஒப்பந்தத்துக்காக ரஃபேல் நிறுவனத்துக்கு கடும் போட்டியளித்த யூரோஃபைட்டர், மைக்கேல் மூலமாக காங்கிரஸ் அரசை அணுகியதாக அவர் கூறினார். 

7-8 வருடங்களாக பேசப்பட்டு வந்த ரபேல் ஒப்பந்தத்தை, கடைசி நேரத்தில் கிறிஸ்டின் மைக்கேல் மாற்றிவிட முயற்சி செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். "இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை தன்னால் மாற்ற முடியும் என மைக்கேல் நினைக்க காரணம் என்ன? அந்த அளவுக்கு பாதுகாப்புத் துறையில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது ஏன்?; மைக்கேல் தலையீட்டை தொடர்ந்து, ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது ஏன்?" என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் கிறிஸ்டியன் மைக்கேல், "திருமதி காந்தி"; "அடுத்த பிரதமராக போகும் இத்தாலிய பெண்ணின் மகன்" என தங்களிடம் விசாரணையில் கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close