அலோக் வர்மா கட்டாய விடுப்பு ரத்து! - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:13 am
supreme-court-reinstates-alok-verma-as-cbi-director-however-he-cannot-take-major-policy-decisions

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சிபிஐ இயக்குனரான அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் லஞ்சப்புகாரில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர ராவ், இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

தொடர்ந்து, கடந்த மாதம் 6ம் தேதி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறானது என்றும் எனவே அவர் சிபிஐ இயக்குனராக பணியை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆனால் அதே நேரத்தில், விசாரணைக்குழு தனது விசாரணையை முழுமையாகமுடிக்கும் வரை அலோக் வர்மா முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close