மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு: மாயாவதி வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:09 pm

central-government-reservation-mayawati-welcomes

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியுள்ள மத்திய அரசின் அறிவிப்புக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு அரசு மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில்  கூடுதலாக 10 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கி, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார். தலித் அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஒரு கட்சியின் தலைவர், மத்திய அரசின் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும்  மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.