அலோக் வர்மா வழக்கின் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:15 pm
congress-opinion-about-sc-verdict-of-alok-verma

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே கூறும்போது, " சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது.

சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதன் மூலம், ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது" என கார்கே தெரிவித்துள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close