"கும்பா" ஜியோ போன் அறிமுகம்: கும்பமேளா தகவல்களுக்கென

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 12:47 pm
kumbamela-reliance-introduces-new-smart-phone

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு, யாத்ரிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் "கும்பா" ஜியோ போன் என்ற பெயரில் புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் வருகிற 15ம் தேதி முதல் உலகப்பிரசித்தி பெற்ற கும்ப மேளா திருவிழா தொடங்குகிறது. 55 நாட்கள்  நடக்கும் இந்த விழாவில் கோடிக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதியை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அங்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவை சிறப்பிக்கும் வகையிலும், பக்தர்களுக்கு உதவி புரிந்திடும் வகையிலும் ரிலையன்ஸ் நிறுவனம் "கும்பா" ஜியோ பாேன் என்ற பெயரில் 4 ஜி வசதி கொண்ட புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

501 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் இந்த மொபைல்போனில் கும்ப மேளா தொடர்பான பயண விவரங்கள், விழாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பாடல்கள் போன்ற பல்வேறு தகவல்கள் தொடர்ந்து ஒளிபரப்பபடும்.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவன மக்கள் தொடர்புத்துறை அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய  அவர், இந்தியாவில், இந்தியர்களுக்காக, இந்தியாவால் தயாரிக்கப்பட்ட இந்த மொபைல்போனின் பயன்பாடு மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி, விழா குறித்த தகவல்களை பக்தர்களும், யாத்ரிகர்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close