வட மாநிலங்களில் கடும் குளிர்: 75 பேருக்கு மூளை செயலழப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 01:42 pm
brain-attack-in-madhya-pradesh

வட மாநிலங்களில் கடும் குளிர்
75 பேருக்கு மூளை செயலழப்பு

வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிரால், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கடந்த ஆறு நாட்களில், 75 பேருக்கு மூளை செயழிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில், 10 பேர் பலியாகியுள்ளனர்.

பெரும்பாலான வட மாநிலங்களில், பனிப் பொழிவு அதிகம் காணப்படுகிறது. பகல் நேரங்களிலும் கடும் குளிர் வாட்டுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், கடும் குளிர் காரணமாக, உடல் வெப்பநிலை குறைந்ததால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதில், 75 பேர் மூளை செயலழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், கடந்த ஆறு நாட்களில், 10 பேர் பலியாகினர். குளிரின் தாக்கம் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மூடு பனியும், சில மாவட்டங்களில் உறைபனியும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close