மாணவராய் அவதாரம் எடுத்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 02:37 pm
81-year-old-senior-politician-turns-as-student

ஒடிசா  மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ., அரசியல் வாழ்வை துறந்து மீண்டும் மாணவராக உருவெடுத்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த 81 வயது மூத்த அரசியல்வாதி நாராயண் சாஹூ. இரண்டு முறை ஒடிசா சட்டபேரவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அரசியலை துறந்து விட்டு மாணவராக அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த 1963-ஆம் ஆண்டு ராவென்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்ற சாஹூ, பின்னர் அரசியலில் இறங்கினார். 1971, 74 மற்றும் 80துகளில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை  பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியலை துறந்த அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு  உத்கல் பல்கலைகழகத்தில் தனது பட்ட மேற்படிப்பினை முடித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு‌ எம்பில் பட்டம் பெற்றார். தற்போது அவர் முனைவர் பட்டத்திற்கான படிப்பினை ஒரிசாவின் உத்கல் பல்கலை கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சகமாணவர்களுடன் கல்லூரி வகுப்பறைக்கு சென்று படித்து வரும் சாஹூ, மூத்த வயது ஹீரோவாக வலம் வருகிறார்.

மாணவர்களுடன் மாணவராய் விடுதியில் தங்கி படிக்கும் இவருக்கு தற்போது பல இளம் வயது மாணவர்கள் இவரது தோழர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close