10 சதவீத இடஒதுக்கீடு- யார் பயன்பெறுவார்கள்?

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 03:50 pm
seat-reservation-bill-filed-in-loksabha

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு வகைச் செய்யும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டால் பெரும்பாலோனோர் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டில் பயன் பெற வேண்டுமானால் ஒருவர் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானமுடையவராகவும் அதற்கான வருமான வரிச்சான்றிதழை பெற்றி இருக்க வேண்டும்.

மேலும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம், ஜாதி சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதற்கான சான்று ஆதார் எண், வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் தான் இந்த திட்டத்தால் பயன்பெற முடியும். வடமாநிலங்களில் ராஜ்புத், பூமிஹார், பனியா, ஜாட், குஜார் இனத்தவர் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close