உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பனை ‌செய்தால் அபராதம்

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 03:56 pm
selling-food-items-in-newspapers-is-an-offence

உணவு பொருட்களை செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

செய்தித்தாள் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில், உணவு பண்டங்களை கட்டுதல், மடித்தல் மற்றும் காகிதத்தின் மீது வைத்து கொடுப்பது, உணவின் பாதுகாப்பு தன்மைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. 

இந்த நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் புதிய வழிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக உணவு பொருட்களை செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close