பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை - மேகாலயா முதல்வர் சங்மா

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 09:39 pm
meghalaya-cm-to-discuss-snapping-ties-with-bjp

நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்டை இஸ்லாமிய நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் கோரி வந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர் அல்லாத ஆறு மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இதற்கு எதிராக அசாம் கன பரிசத் கட்சி பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தன்னுடைய தேசிய மக்கள் கட்சி விலகுவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, "இது இந்த சட்டத்திருத்தம் நிறைவேறியது மிகவும் எதிர்பாராத ஒரு விஷயம். நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்த ஒரு சட்டத்திருத்தம் இதுவாகும். கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சியின் மற்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். எங்கள் கட்சி 5 மாநிலங்களில் உள்ளது. எனவே அனைத்து தலைவர்களிடமும் நான் பேசி தான் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close