பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு; மக்களவையில் நிறைவேற்றம்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:26 pm
10-quota-passed-in-lok-sabha

பொதுப்பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  இன்று நிறைவேறியது. நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

நாட்டில் உள்ள பொதுப்பிரிவினரை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரத்திற்கு விவாதம் நடைபெற்றது. பின்னர், எதிர்க்கட்சியான காங்கிரஸும் சேர்ந்து வாக்களிக்க, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாளை இந்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close