தலைநகர் டெல்லியை வாட்‌டி வதைக்கும் கடும் குளிர்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 11:09 am
cold-weather-continues-in-delhi

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் ஏற்பட்டிருக்கும்  தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து, ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரோடு, காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகிறது. பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசு கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது. 

இதை தொடர்ந்து, குளிரை சமாளிக்க மக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிர்க்காய்கின்றனர். வீதியில் தங்கும் மக்களுக்குக்காக தற்காலிக தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே வானிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close