முக்கிய பதவியில் திருங்கையை நியமித்த காங்கிரஸ்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 11:01 am
congress-appoints-first-transgender-as-g-s


சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான திருநங்கை அப்சரா ரெட்டி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 

திருநங்கை அப்சரா ரெட்டி செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடமாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய கட்சியான காங்கிரஸ், முதல் முறையாக கட்சியின் முக்கிய பதவியில் ஒரு திருநங்கை நியமித்து உள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close