3 மாதத்திற்கு பின் அலுவலகம் வந்தார் அலோக் வர்மா

  விசேஷா   | Last Modified : 09 Jan, 2019 11:07 am
alok-verma-came-back-to-office

 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, மூன்று மாதங்களுக்கு பின், டில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்தார். 

சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கு கட்டாய நீண்ட விடுப்பு வழங்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக, நாகேஷ்வர ராவிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, டில்லியில் உள்ள வர்மாவின் அலுவலக அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, வர்மா, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது. எனினும், அலோக் வர்மாவுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவர் சி.பி.ஐ., இயக்குனராக தொடர்ந்தாலும், அவரால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின், அலோக் வர்மா, டில்லியில் உள்ள தன் அலுவலகத்திற்கு நேற்று வருகை புரிந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close