இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 11:50 am
pak-army-attacks-at-indian-camps

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பூஞ்ச் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் 4-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்,அதற்கான இந்திய ராணுவத்தின் அதிரடி பதிலடி என பூஞ்ச் எல்லைப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி  வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close