இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி- உலக வங்கி அறிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 12:34 pm
world-bank-predicts-robust-7-3-gdp-growth

சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மாறி வருவதாக உலக வங்கி, அதன் ஜனவரி மாத அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி மாதந்தோறும் வளர்ச்சி தொடர்பான தரவுகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் நிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வள அறிக்கை பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் சர்வதேச அளவில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பால் சரிவடைந்த இந்தியாவின் பொருளாதாரம், தற்போது முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்து வருவதால் மேலும் வளர்ச்சியடையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த 2017ம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது என்றும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, 2018ம் ஆண்டு  சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் சீன நாடானது 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close