அந்தமான் தீவுகளுக்கு விரைவில் கடல் விமான சேவை

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 12:58 pm
andaman-will-soon-be-connected-through-seaplanes

சுற்றுலாவை அதிகப்படுத்தும் நோக்கிலும், மக்களின் அன்றாட அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே விரைவில் கடல் விமானங்கள் சேவை இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் அந்தமான், நிக்கோபார், கார் நிக்கோபார், கேம்பல் பே, சுவராஜ்தீப், ஹத்பே, சாஹீத்துவிப், நீண்ட தீவு,  திக்லிப்பூர் ஆகிய தீவுகளுக்கு  கடல் விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் அந்தமானிலிருந்து 5 விண்ணப்பங்களும், குஜராத் மற்றும் கேரளாவிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விண்ணபங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் வருகிற ஜீன் மாதம் முதல் கடல் விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close