கோலி, சாய்னா, தீபிகாவுக்கு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் சேலஞ்ச்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:52 pm
rajyavardhan-rathore-plays-table-tennis-with-both-hands-to-start-5minuteaur-challenge

கேலோ இந்தியா போட்டிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விராட் கோலி, சாய்னா நேவால், தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு ஓர் சவாலை முன்வைத்து ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு விளையாட்டு மேம்பாட்டுக்கான திட்டம் 'கேலோ இந்தியா' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது ஆண்டாக  விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. 

'கேலோ இந்தியா' போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கி, 20ம் தேதி வரை நடக்கவுள்ளன. இதில் 29 மாநிலங்களில் இருந்து சுமார் 10,000 பேர் பங்கேற்கின்றனர். 

இந்நிலையில் கேலோ இந்தியா' போட்டிகளை பிரபலப்படுத்தும் பொருட்டு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 'பிட்னெஸ் சேலஞ்ச்' போன்று தற்போது ஒரு சேலஞ்சை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இரண்டு கையாலும் டேபிள் டென்னிஸ் விளையாடிக்கொண்டே பேசுவது போன்ற ஒரு ஒரு வீடியோவை பதிவிட்டு, வீரர்கள், பிரபலங்கள் தங்களது சிறுவயதில் ஏற்பட்ட விளையாட்டு அனுபவங்களை பகிர வேண்டும்,  என  அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close