பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும்: பிபின் ராவத்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 03:57 pm
army-chief

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு இருக்கும் வரை பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரிவினைவாதத்தை பரப்புவதற்கு முக்கிய தளமாக பயன்படுத்துவதால் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். 

இந்தியாவின் எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. 

இதன் மூலம் படித்த இளைஞர்கள் தவறான ப‌ாதையில் இட்டுச்செல்லப்படுகிறார்கள். அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு பல்வேறு பயங்கரவாத குழுக்களில் சேருகின்றனர். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு உள்ள வரை பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close