பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமா? - மத்திய அமைச்சர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 10:50 am
hindi-is-not-mandatory-in-new-education-policy-prakash-javadekar

மத்திய அரசு வகுத்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில், பள்ளி பாடத்திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அதுபோன்ற எந்தவொரு பரிந்துரையையும் நிபுணர் குழு முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதிய கொள்கை கொள்கை குறித்த வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு தயாரித்து வந்தது. அதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக இன்று காலை ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நிபுணர் குழு இன்னும் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை என்றபோதிலும், அதுகுறித்து கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் ஹிந்தி கட்டாயம் என்பது தெரியவந்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதற்கு விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் நிபுணர் குழு, எந்தவொரு மொழியையும் கட்டாயம் என பரிந்துரைக்கவில்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியான நிலையில் இந்த விளக்கம் தேவையானதாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close