புலந்த்ஷஹர் கலவரம் தொடர்பாக தேடப்பட்ட நபர் கைது

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:13 pm
main-accused-arreseted-in-bulandshahar-case

 

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில், கடந்த மாதம் நடந்த கலவரத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த இந்த கலவரத்தில், பலர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை ஒடுக்க சென்ற போலீஸ் அதிகாரி சுபோத் குமார் படுகொலை செய்யப்பட்டார். 
இந்த வழக்கில் தொடர்புடைய, பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்த, ஷிகர் அகர்வாலை  போலீசார் தேடி வந்தனர். இந்நிலைலயில், நேற்று நள்ளிரவு, புலந்த்ஷஹர் மாவட்டம் ஹர்பூர் அருகே, ஷிகர் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். 
அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

newtm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close