பாகிஸ்தானுடன்  அமைதி பேச்சுக்கு வாய்ப்பே இல்லை: ராணுவ தலைமை தளபதி திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 02:03 pm
no-peace-talk-to-pakistan-bipin-rawat

தனது  வன்முறை நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிடும்வரை, அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் திட்டவட்டமாக கூறினார்.

இதுதொடர்பாக,டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழாண்டுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
நமது அண்டைய நாடான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் வன்முறையை கைவிடுவதாகவோ, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் இருப்பதாகவோ தெரியவில்லை. எனவே, பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போடும்வரை அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

புதிய வகை ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ராணுவத்தில் சேர்க்க, மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வரும் மார்ச் மாதம்வரை அவகாசம் கோரியுள்ளது. குறித்த நேரத்துக்குள் அவற்றை வழங்கமுடியாவிட்டால், வெளிநாடுகளிடமிருந்துதான் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய வேண்டி வரும்.

ஆப்கானிஸ்தான் நலனில் இந்தியா மிகுந்த  அக்கறை கொண்டுள்ளது. எனவே, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியாவை விலக்கி வைக்க முடியாது.

நமது ராணுவ அதிகாரிகள் சிலருக்குள் ஒற்றுமையின்மை நிலவுவதை என்னால் அறிய முடிகிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல. தேசநலன் கருதி ராணுவ வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என  ராவத் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close