ராணுவத்தில் ஓரினச் சேர்க்கையா? தளபதி ராவத் கொதிப்பு 

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:59 pm
no-homosex-in-indian-army-rawat

 

இந்திய ராணுவத்தில், ஓரினச் சேர்க்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, டில்லியில் செய்தியாளர்களிடம்  மேலும் அவர் கூறியதாவது:
ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. எனினும், ஒரே பாலினத்தை சேர்ந்தோர் உறவு கொள்வதை ராணுவ சட்டம் அனுமதிப்பதில்லை. 
எங்களுக்கென தனி சட்ட நடைமுறைகள் உள்ளன. இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு மேல் எதுவும் கிடையாது. எனினும், ராணுவத்தில் சேரும் நபர், அப்போதிலிருந்து, சாதாரண இந்திய பிரஜையிலிருந்து வேறுபடுகிறார். 
ராணுவத்திற்கென உள்ள சட்டதிட்டங்களை அவர் கடைபிடித்தாக வேண்டும். இந்திய ராணுவத்தில், ஓரினச் சேர்க்கைக்கு  ஒருபோதும் அனுமதி கிடையாது என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close