டெல்லி காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஷீலா தீக்ஷித்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 07:55 pm
sheila-dikshit-appointed-as-delhi-congress-chief

முன்னாள் டெல்லி முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷித், 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முதல்வராக மூன்று முறை பணியாற்றியுள்ளவருமான ஷீலா தீக்ஷித், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஷீலா தீக்ஷித் தலைவராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மக்கானுக்கும் இடையே நல்லுறவு இல்லையென்ற காரணத்தினாலேயே, அவர் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 80 வயதான ஷீலா தீக்சித் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், ஷீலா தீக்ஷித்தின் நியமனம் அதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வயதான காரணத்தால், ஷீலா தீக்ஷித்திற்கு உதவியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட செயல் தலைவர்கள் பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close