சிபிஐ தலைவர் அலோக் வர்மா அதிரடி நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 08:08 pm
cbi-chief-alok-verma-removed-as-cbi-head

கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட சிபிஐ தலைவர் அலோக் வர்மாவை மீண்டும் பணியில் உச்ச நீதிமன்றம் அமர்த்திய நிலையில், உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்ட குழு, அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு முன், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பெரும் சர்ச்சை எழுந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச புகார்களை தெரிவித்த நிலையில், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்து அலோக் வர்மா தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.

ஆனாலும், அவர் பதவியில் நீடிப்பது குறித்து முடிவெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்த கமிட்டி நேற்று கூடியது. ஆனால், எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அலோக் வர்மா, இடைக்கால சிபிஐ தலைவராக இருந்த நாகேஸ்வர ராவின் பல்வேறு பணியிட மாற்ற உத்தரவுகளை திரும்பப் பெற்றார். இன்று மீண்டும் கூடிய உயர்மட்ட குழு, வர்மாவை சிபிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, அவரை நீக்க முடிவெடுத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close