முத்தலாக்: மீண்டும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 09:30 am
cabinet-approves-re-promulgation-of-triple-talaq-ordinance

முத்தலாக் முறையை தடைசெய்ய வழிவகுக்கும் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கடுமையாக முயற்சித்தது.

இருப்பினும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து முத்தலாக்கை தடை செய்ய வழிவகுக்கும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அவசரச் சட்டம் இந்த மாத  இறுதியில் காலாவதியாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close