10 சதவீத இடஒதுக்கீடு- ப.சிதம்பரம் கருத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 12:45 pm
10-reservation-p-chidambaram-tweets

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது என மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எனினும் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர்.  மாதம் ரூ 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை தான்.  ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அதில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close