ஆக்கிரமிப்பு பகுதி காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 12:49 pm
protest-of-pok-kashmir-people-against-pakistan-govt

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் மற்றும் ஜீலம் நதிகளின் குறுக்கே மாபெரும் அணைகளைக் கட்டவும், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலம் நதியில் அணை கட்டுவதால் குடிநீர் ஆதாரமும் குறைந்து வருகிறது என்று அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோன்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள், கனிமங்கள் உள்ளிட்டவற்றை சுரண்டும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அங்கு வசித்துவரும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காலத்தில் இருந்தே பொதுமக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்றும், பாகிஸ்தான் அரசு சர்வாதிகார அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close