டெல்லியை வா‌ட்டி ‌வதைக்கும் குளிர்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 12:51 pm
4-6-degree-celcius-temparature-prevailed-in-delhi

வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் இன்று காலை 4.8 டிகிரியாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

சாலை, ரயில் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும் நிலை உள்ளது.

குளி‌ரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும் டெல்லியில் காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 4.8 டிகிரியாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதே நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close