23 நாடுகளை சுற்றி பார்த்த டீ விற்கும் தம்பதி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 01:28 pm
tea-seller-visits-23-nation

 

கேரளாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக டீ விற்கும் முதியவர், தினமும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை சேர்த்து வைத்து, தன் மனைவியுடன், 23 நாடுகளை சுற்றி பார்த்துள்ளார்.

கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் விஜயன், 70. இவர், தன், 16வது வயதில் டீ விற்பனையை துவங்கினார். உலக நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதை அடுத்து, அனுதினமும் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு தொகையை சேர்த்து வைத்தார்.

தனக்கு திருமணம் ஆனதும், தன் ஆசை குறித்து மனைவியிடம் தெரிவித்தார். மகிழ்ச்சி அடைந்த மனைவி, விஜயனின் ஆசையை நிறைவேற்ற, டீ விற்கும் தொழிலில் தானும் களம் இறங்கினார். 

கிடைக்கும் வருமானத்தில்,  தினமும் குறைந்த பட்சம், 300 ரூபாயை சேர்த்து வைக்க துவங்கினர். 
ஆண்டு இறுதியில், தங்களிடம் சேர்ந்த பணத்திற்கு ஏற்ப, ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அந்த வகையில், இதுவரை, இருவரும், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட, 23 நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் பற்றிய தகவல் அறிந்த, மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்த தம்பதியை பாராட்டி, டுவிட்டரில் பதிவிட்டார். தான் கேரளா செல்லும் போது அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 
இதை தொடர்ந்து, இந்த தம்பதி பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close