மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை முயற்சி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 02:03 pm
suicide-attempt-at-metro-station

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில், இளைஞர் ஒருவர், தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

பெங்களூரு, எலச்சென்னஹல்லி - நாகசந்திரா இடையே உள்ள நேஷனல் காலேஜ்  மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், ரயில் வந்த போது, திடீரென தண்டவாளத்தில் குதித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஞ்ஜின் டிரைவர், ரயிலை நிறுத்தினார். அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்த சம்பவத்தால், மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close