நாடு முழுவதும் கொண்டாடப்படும் அறுவடை திருநாள்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 04:56 pm
pongal-festival

தமிழகத்தில் அறுவடை திருநாளாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. 

மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளான இதை, வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

அண்டை மாநிலங்களான, கர்நாடகா, கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மகர சங்கராந்தி என்ற பெயரில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
குஜராத்தில், உத்தராயண புண்ணியகாலமாக இந்த நாளை கொண்டாடுகின்றனர். 

ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில், மாஹி என்ற பெயரில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. 

அசாமில், மாஹ் பிஹு எனவும், சிசுர் சைங்க்ராத் என்ற பெயரில் காஷ்மீரின் சில பகுதிகளிலும், போஷ் சங்கராந்தி என்ற பெயரில் மேற்கு வங்கத்திலும், இந்த பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உத்தர பிரேதசம், மத்திய பிரேதசத்தின் சில பகுதிகள், பீஹாரின் மேற்கு மாவட்டங்களில், கிச்டி என்ற பெயரில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

தவிர, சத்தீஸ்கர், கோவா, ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களிலும், ஜம்முவின் பெரும்பாலான பகுதிகளிலும், மகர சங்கராந்தி என்ற பெயரிலேயே, இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இது தவிர அண்டை நாடுகளான, பாகிஸ்தானின் சிந்த் பகுதிகளில், திமூரி என்ற பெயரிலும், வங்கதேசத்தில், போஷ் சங்கராந்தி எனவும், நேபாளத்தில், மாகே அல்லது கிச்டி சங்கராந்தி என்ற பெயரிலும், அறுவடை திருநாள் கொண்டாடப்படகிறது. 

இது தவிர, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close