இடைத்தரகர் கிறிஸ்டியனுக்கு உதவ அலுவலர் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 03:15 pm
the-british-high-commission-in-india-gets-consular-access-to-christian-michel

அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு உதவ, ஒரு அலுவலரை நியமிக்கவுள்ளதாக டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

அகஸ்டாவெஸ்ட் லேண்ட்  ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த டிசம்பர் மாதம் 4 -ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் காவலுக்கு பிறகு, தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து அறிந்துக் கொள்ள வசதியாகவும், அவருக்கு உதவவும் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுகிறார் என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close