கும்பமேளா- ஜனவரி 26 முதல் ஏர்போட் சேவை தொடக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 03:53 pm
varanasi-air-boat-service-from-26th-january

உத்தரப்பிரேதச மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்ப மேளா திருவிழாவில் ஏர் போட் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் வருகிற 15ம் தேதி புகழ் பெற்ற கும்பமேளா திருவிழா தொடங்குகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலிமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக அங்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் பாேக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரணாசியிலிருந்து பிராயக்ரஜ் இடையே ஏர்போட் சேவை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், பக்தர்களின் வசதிக்காக ஏர்போட் சேவை வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என்றார். மேலும் இந்த ஏர்போட்டில் ஒரே சமயத்தில் 16 பேர் பயணிக்கலாம் என்றும் இந்த ஏர்போட் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close