கும்பமேளாவில் நாசவேலை செய்ய சதி- உளவுத்துறை எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 04:59 pm
kumbamela-security-tightened

உத்தரப்பிரதேசத்தில் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நாசவேலையை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வரும் 14-ம் தேதி மகா கும்பமேளா தாெடங்குகிறது. மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த வழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்பர்.

இந்நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில் மக்களோடு மக்களாக ஊடுருவி நாசவேலை செய்ய பாக். பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கையை அடுத்து அலகாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வரும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுமதிப்பது என வட கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close