பெண்களுக்காக பெண்களே இயக்கும் "PINK" டாக்சி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Jan, 2019 06:09 pm
women-drivers-in-pink-taxi-service-in-bangalore

பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்தில் பெண் ஓட்டுநர் கொண்ட Pink Taxi சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாக பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தில் இயக்கப்படும் வாடகை கார் சேவையில், ஒரு பகுதி பிரிக்கப்பட்டு Pink Taxi என்ற பெயரில் இயக்கப்படுகிறது. 

இந்த Pink Taxi-களில் ஓட்டுநர்கள் பெண்கள் ஆகும், எனவே இரவு நேரத்தில் தனிமையில் பயணிக்க விரும்பும் பெண்கள் இந்த புது சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த Pink Taxi-களை இயக்கும் ஓட்டுநர்கள் பன்மொழி திறன் கொண்டவர்கள் எனவும், உள்ளூர் பகுதிகளின் வழிகளை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், GPRS மற்றும் SOS switch போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இந்த வாகனங்கள் சேவைக்கு பயன்படுத்துவதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close