முதல்வர் கமல் நாத்தை விமர்சித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 07:52 pm
headmaster-who-criticised-cm-kamal-nath-suspended

மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தை 'திருடன்' என விமர்சித்த ஜபல்பூர் பள்ளியின் தலைமை ஆசிரியர், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வரானார். சமீபத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், கமல் நாத்தை பற்றி விமர்சனம் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், கமல் நாத் ஒரு திருடன் எனக் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். இந்நிலையில், அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஜபல்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது எப்படி பேச்சு சுதந்திரமாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close