சட்டப்பூர்வமாக ராமர் கோவில் கட்டுவோம் - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 09:44 pm
will-construct-ram-mandir-lawfully-amit-shah

புதுடெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோவிலை சட்டப்பூர்வமாக கட்டுவோம் முயற்சித்து வருவதாகவும், காங்கிரஸ் அதற்கு தடைகள் போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய போது "பாரதிய ஜனதா கட்சிக்கு ராமர் கோயிலை எவ்வளவு சீக்கிரம் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்ட வேண்டும் என்று தான் விருப்பம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டபூர்வமாக ராமர் கோவிலை கட்டி முடிப்போம். அதற்கான அத்தனை முயற்சிகளும் உச்சநீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது" என்று கூறினார்.

ராமர் கோவில் விவகாரத்தில், மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் நெருக்கடி கொடுத்தார்கள்
 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால், பாரதிய ஜனதா நிச்சயம் தோல்வி அடையும் என அவர்கள் எச்சரித்துள்ளர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 26-ஆம் அடுத்த விசாரணை நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close