எல்லையில் வெடிகுண்டு தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 10:06 pm
two-soldiers-killed-in-loc-bomb-blast

ஜம்மு காஷ்மீரின், ரஜோரி பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில், 2 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

காஷ்மீரின் ரஜோரியில், எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே, ஒரு நவீன வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த  2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஒரு அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்" என தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என உறுதிபட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close