ஆம் ஆத்மி கட்சியின் மீரா சன்யல் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 06:14 am
aam-aadmi-s-meera-sanyal-passes-away

ஆர்.பி.எஸ் வங்கியின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியுமான மீரா சன்யல், புற்றுநோயால் இரண்டு வருடங்கள் போராடி வந்த நிலையில், நேற்று காலமானார்.

ராயல் ஸ்காட்லாண்ட் வங்கியின் தலைவராக பணியாற்றி வந்த மீரா சன்யல், 2009ம் ஆண்டு மகராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியலில் கால் பதித்தார். அதன் பின்னர், 2014ம் ஆண்டு, ஆர்.பி.எஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவராகவும், பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்த மீரா சன்யல், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 57 வயதான அவர் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.

ஆர்.பி.எஸ் தலைவராக இருந்தபோதும், FICCI, CII உள்ளிட்ட ஆணையங்களில் இருந்துபோதும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மீரா எடுத்திருந்தார். அவரது மறைவுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close