டெல்லியில் கடும் பனிப்பொழிவு- 11 ரயில்கள் தாமதம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 12:27 pm
delhi-11-trains-are-running-late-due-to-heavyfog

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 11 ரயில்கள் 2 மணி முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பாெழிவு நிலவுகிறது. இதனால் சாலை, ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆஸ்துமா நோயாளிகள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் இந்த காலமாற்றத்தால் இருமல், மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close