5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை:

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 12:33 pm
cost-of-goods-fell-by-rs-1-lakh-crore-arun-jaitely


ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அருண் ஜேட்லி தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை என்றும் மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இணைக்கப்பட்டன என்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களின் விலை  குறைந்தது என்றார்.  
 
மேலும், வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல், ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளது என்று அதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close