ராமர் கோவிலை கட்டியே தீர வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 03:08 pm
ram-temple-issue-subramanian-swamy-says-his-opinion

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பொதுமக்களுக்கு துரோகம் செய்தது போல் ஆகி விடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

மக்கள் நலனுக்காக அயோத்தியில் ராமர் கோவில் உடனே கட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ‌செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ராமர் கோவில் இடம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. 

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை அந்த இடத்திற்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாட முடியும். உச்சநீதிமன்றம் 100 வருடங்கள் கழித்து கூட தீர்ப்பு கூறட்டும். அதற்குள் ராமர் கோவிலை கட்டி விட வேண்டும். அப்படி நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அந்த இடத்திற்குரிய உரிய இழப்பீட்டை வழங்கி விடலாம் என்றார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close