பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அவசியம்: காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:22 pm
there-is-a-need-of-alliances-in-the-entire-country-congress

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "கடந்த 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 31 சதவீத வாக்குகளை தான் பெற்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைத்ததால், நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பாஜகவை ஏற்றுகொண்டுவிட்டதாக அக்கட்சியினர் பெருமை பேசி வந்தனர்.

ஆனால், உண்மையில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்ததினால்தான் கடந்த முறை தேர்தலில் அக்கட்சி வெற்றிப் பெற முடிந்தது. இந்த முறை அப்படி நிகழாமல் இருக்க, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான  கூட்டணி அமைய வேண்டியது அவசியம்" என கமல்நாத் கூறினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தரப் பிரதேசத்தின் இரு பிரதான கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜம் இன்று தங்களுக்குள்ளான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரசின் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close