பாஜகவை வீழ்த்த முடியாது- ரவிசங்கர் பிரசாத்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 04:28 pm
coalition-with-mayawati-and-akhilesh-yadav-could-not-bring-down-the-bjp

மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது என பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவை வீழ்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. 

இதுதொடர்பாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர். 
 
இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி அமைத்துள்ள கூட்டணியால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என பா.ஜ.க. தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அமைத்துள்ள கூட்டணியால் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி பாஜகவை வீழ்த்த  முடியாது என்று அதில் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close