கிருஷ்ணா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Jan, 2019 06:03 pm
new-bridge-across-krishna-river-chandrababu-naidu-lays-foundation-stone

கிருஷ்ணா நதியின் குறுக்கே ஆயிரத்து 387 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த 2014இல் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆந்திராவிற்கு புதிய தலைநகரை அமராவதியில் உருவாக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முடிவு செய்தது.

 அதனையடுத்து, அமராவதி நகரை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, அமராவதி அருகில் உள்ள கிருஷ்ணாநதியின் குறுக்கே பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. 
ஆயிரத்து 387 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close