ஜியோவுக்கு போட்டியாக வோடாபோனின் ஓராண்டு சந்தா அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 06:06 pm
vodafone-introducing-one-year-data-plan

ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு ரூ.1,499 மதிப்பில் ஓராண்டு சந்தாவை வோடாபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தொலைத்தொடர்பு உலகில் தனி ஜாம்பவனாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஜியோவுக்கு போட்டியாக இந்த முயற்சியை வோடாபோன் மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ரூ.1,499 மதிப்புக்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அளவில்லா அழைப்புகள், 100 இலவச குறுஞ்செய்தி ஆகிய வசதிகள் கிடைக்கும். இத்துடன், வோடாபோன் பிளே மற்றும் தேசிய அளவிலான ரோமிங் சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த சேவை அனைத்தும் ஓராண்டு வேலிடிட்டி உடையதாகும். 

முன்னதாக, இதேபோன்ற சலுகையை ரூ.1,699 மதிப்பில் ஜியோ வழங்கி வருகிறது. இந்த மதிப்பில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவும், அளவற்ற தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை ஓராண்டுக்கு கிடைக்கும். அத்துடன் ஜியோ டிவி, ஜியோ மியூசிக் போன்ற சேவைகளையும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close