10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 06:47 pm
president-approves-10-quota-bill

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்தது. நாடாளுமன்ற கீழவையில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, மாநிலங்களவையில் இரு தினங்களுக்கு முன் வெற்றி பெற்றது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக ஆளும் கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close