மாயாவதி - அகிலேஷ் கூட்டணி மோடிக்கு தான் பின்னடைவு- ராகுல்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:12 am
mayawati-akhilesh-alliance-is-setback-for-modi-not-us-rahul-gandhi

நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷின் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், அது பாரதிய ஜனதாவுக்கு தான் பின்னடைவு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில், காங்கிரஸ், சமாஜ்வாடி, மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை அறிவித்தனர்.

இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளனர். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டது பற்றி பேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி, "இந்த கூட்டணி பாரதிய ஜனதாவுக்கு தான் பின்னடைவு, எங்களுக்கு அல்ல என்று கூறினார். சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைப்பதற்கு, எல்லா உரிமையும் அவர்களுக்கு உள்ளது. அது அவர்களுடைய அரசியல் முடிவு. அவர்கள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இதை பின்னடைவு என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், பாரதிய ஜனதா உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்தைக் கூட போவதில்லை" என்று கூறினார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close